மேலும் செய்திகள்
நேசித்தாலே கல்வி நேசிக்கும்
28-Mar-2025
விருதுநகர் : விருதுநகர் மாவட்டத்தில் 2024-25ம் கல்வியாண்டிற்கான நீட் நுழைவுத் தேர்வு பயிற்சி வகுப்புகள் அருப்புக்கோட்டை சி.எஸ்.ஐ., மேல்நிலைப்பள்ளி, விருதுநகர் ஷத்திரியா பெண்கள் மேல்நிலைப்பள்ளி, திருத்தங்கல் எஸ்.என்.ஜி., பெண்கள் மேல்நிலைப்பள்ளி, ராஜபாளையம் நாடார் மேல்நிலைப்பள்ளி ஆகிய மையங்களில் ஏப். 1 முதல் நடந்து வருகிறது. 488 மாணவர்கள் பயற்சி பெறுகின்றனர். கலெக்டரின் வழிகாட்டுதலின்படி, கிருஷ்ணன் கோவில் கலசலிங்க பல்கலையில் உண்டு உறைவிட பயிற்சியாக 147 மாணவர்கள் நீட், சி.யு.இ.டி., தேர்விற்கு பயற்சி பெற்று வருகின்றனர். இப்பயிற்சியில் அனுபவம், திறமை வாய்ந்த தலைமை ஆசிரிர்கள், கருத்தாளர்களால் தினசரி வகுப்புகள், மாதிரி தேர்வுகள் நடத்தப்பட்டு வருகிறது. இப்பயிற்சி வகுப்புகளுக்கான ஏற்பாடுகளை முதன்மை கல்வி அலுவலர் மதன்குமார் கண்காணித்து வருகிறார்.
28-Mar-2025