உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / மந்தகதியில் புதிய பஸ் ஸ்டாண்ட் பணிகள்

மந்தகதியில் புதிய பஸ் ஸ்டாண்ட் பணிகள்

அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டை புதிய பஸ் ஸ்டாண்ட் பணிகள் மந்தகதியில் நடப்பதால் திறப்பு விழா பல முறை தள்ளி போனதால் மக்கள் அதிருப்தியடைந்துள்ளனர்.அருப்புக்கோட்டை மதுரை ரோட்டில் நகராட்சி பஸ் ஸ்டாண்ட் உள்ளது. இங்கு தினமும் 500 க்கும் மேற்பட்ட பஸ்கள் வந்து செல்கின்றன. பஸ் ஸ்டாண்ட் கட்டி 30 ஆண்டுகள் ஆன நிலையில் இதை இடித்து விட்டு புதிய நவீன வசதிகளுடன் கூடிய பஸ் ஸ்டாண்ட் தான் கட்ட நகராட்சி முடிவு செய்தது. பின்னர் 8 கோடி ரூபாய் நிதியில், 2023 மே மாதம் பணிகள் துவங்கியது. அதுவரை எதிரே தற்காலிகமாக பஸ் ஸ்டாண்ட் அமைக்கப்பட்டது. இதில் பயணிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்யப்படவில்லை. மழை காலத்தில் தற்காலிக பஸ் ஸ்டாண்ட் வெள்ள காடாக மாறி விடுகிறது. பயணிகள் பல மணி நேரம் நின்று சிரமத்துடனே பஸ்கள் ஏற வேண்டி உள்ளது. புதிய பஸ் ஸ்டாண்ட் கட்டுமான பணிகள் முடிந்து ஜனவரியில் 2024 ல் திறக்கப்படும் என அறிவித்தனர். பல நாட்கள் பணி கிடப்பில் போடப்பட்டு மந்தகதியில் நடந்து வருகிறது. நகராட்சி அதிகாரிகள் ஒப்பந்ததாரரை பணியை விரைந்து முடிக்க அறிவுறுத்துவதில்லை. பணி செய்யும் காலம் முடிவடைந்து மாத கணக்கில் ஆகியும் இன்னும் பணி நடந்து கொண்டு இருக்கிறது. இதனால் 8 கோடி நிதியில் முடிய வேண்டிய பணி தற்போது 12 கோடியாக உயர்ந்துள்ளது. இதே ஒப்பந்தகாரர் 8 கோடி நிதியில் சொக்கலிங்கபுரம் நகராட்சி மயான ரோட்டில் மார்க்கெட் கட்டும் பணியை செய்து வருகிறார். இதுவும் மந்தகதியில் பணி நடக்கிறது. 2024 ஜூன் மாதம் பஸ் ஸ்டாண்ட் திறக்கப்படும் என அதிகாரிகள் அறிவித்தனர். அதன் பின்னர் நவம்பரில் திறக்கப்படும் என்றனர். கடைசியாக 2025 மார்ச் முதல் வாரத்தில் திறக்கப்படும் என்றனர். ஆனாலும் பணிகள் எதுவும் முடியாத நிலையில் தற்போது ஏப்ரல் மாதம் உறுதியாக திறக்கப்படும் என்றனர். பணிகள் முடியாததால் அடுத்து எந்த மாதத்தை சொல்வது என தெரியாமல் அதிகாரிகள் தயங்குகின்றனர். நன்றாக இருந்த பஸ் ஸ்டாண்டை தேவையில்லாமல் இடித்து விட்டு பல கோடிகளை கொட்டி பணி முடிவடையாமல் மக்களை பாடாய்ப் படுத்துகின்றனர். பணிகளை விரைந்து முடிக்க ஒப்பந்ததாரருக்கு நோட்டீஸ் கொடுத்துள்ளதாக நகராட்சி நிர்வாகம் கூறுகிறது. தற்போது இயங்கி வரும் தற்காலிக பஸ் ஸ்டாண்டை மதுரை ரோட்டில் உள்ள வேறு இடத்திற்கு மாற்ற அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.இதை வைத்து பார்க்கும் போது மக்களிடையே, புதிய பஸ் ஸ்டாண்ட் பயன்பாட்டிற்கு வராது என்ற எண்ணத்தை ஏற்படுத்தி உள்ளது. ஒப்பந்தகாரரிடம் மாவட்ட நிர்வாகம் கடுமை காட்டி பஸ் ஸ்டாண்ட் பணிகளை விரைவில் முடிக்க நகராட்சிக்கு அறிவுறுத்த வேண்டும். மழைக்காலத்தில் மழையிலும், கோடை காலத்திலும் வெயிலிலும் மக்கள் பஸ் ஸ்டாண்டில் நின்று சிரமப்படுகின்றனர். விரைவில் பஸ் ஸ்டாண்ட் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி