திருத்தங்கலில் புதிய மின் கம்பம்
சிவகாசி : தினமலர் நாளிதழ் செய்தி எதிரொலியாக திருத்தங்கல் ரோட்டில் சேதம் அடைந்திருந்த மின் கம்பம் மாற்றப்பட்டு புதிய மின்கம்பம் அமைக்கப்பட்டது.சிவகாசி-திருத்தங்கல் ரோட்டில் சுகாதார வளாகம் அருகே மின்கம்பம் முற்றிலும் சேதம் அடைந்து கம்பிகளால் மட்டுமே தாங்கி நின்றது. போக்குவரத்து நிறைந்த ரோட்டில் சேதம் அடைந்த மின் கம்பத்தால் வாகன ஓட்டிகள் அச்சத்தில் இருந்தனர்.எனவே சேதமடைந்த மின் கம்பத்தை மாற்றி அமைக்க வேண்டும் என தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது. இதன் எதிரொலியாக மின் துறையினர் சேதமடைந்த மின் கம்பத்தை அகற்றி புதிய மின்கம்பம் அமைத்தனர். இதனால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.