உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / விருதுநகர் பட்டாசு ஆலையில் தீ பாதிப்பு இல்லை

விருதுநகர் பட்டாசு ஆலையில் தீ பாதிப்பு இல்லை

விருதுநகர்; விருதுநகர் அருகே தியாகராஜபுரத்தில் ராதிகா பயர் ஓர்க்ஸ் ஆலையில் பட்டாசு தயாரிப்பின் போது தீ விபத்து ஏற்பட்டது. இதில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் பாதிப்பு இல்லை. இதுகுறித்து வச்சக்காரப்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர். சிவகாசியைச் சேர்ந்தவர் சவுந்திரபாண்டியன். இவருக்கு சொந்தமாக வச்சக்காரப்பட்டி அருகே தியாகராஜபுரத்தில் ராதிகா பயர் ஓர்க்ஸ் என்ற பாம்பு மாத்திரை வகை பட்டாசுகள் தயாரிக்கும் ஆலை உள்ளது. நேற்று மதியம் 1:30 மணிக்கு பட்டாசு தயாரிப்பு பணிகளில் தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தனர். அப்போது அறையில் இருந்த மிஷினில் உராய்வினால் தீப்பிடித்தது. தொழிலாளர்கள் அறையை விட்டு வெளியேறி தீயணைப்புத்துறைக்கு தெரிவித்தனர். தீயணைப்புத்துறையினர் தீயை அணைத்து தீ பரவலை தடுத்தனர். இந்த விபத்தில் தொழிலாளர்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. ஒரு அறை மட்டும் தீயால் பாழானது. வச்சக்காரப்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி