| ADDED : மார் 21, 2024 01:17 AM
விருதுநகர்: விருதுநகரில் பலத்த போலீசார் பாதுகாப்புக்கு மத்தியில் லோக்சபா தேர்தலுக்கானவேட்புமனு தாக்கல் துவங்கியது. முதல் நாளான நேற்று யாரும் வரவில்லை.லோக்சபா தேர்தல் ஏப். 19ல் நடக்க உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல்நேற்று(மார்ச் 20) முதல் துவங்கியது. மார்ச் 27 கடைசி நாள். மார்ச் 28ல் மனுக்கள் பரிசீலனை உள்ளது. வேட்புமனு வாபஸ் பெற கடைசி நாள் மார்ச் 30. இதை தொடர்ந்து வேட்பாளர்களின் பிரசாரமும் நடக்கிறது. முதல் நாளான நேற்று ஒருவர் கூட வேட்பு மனு தாக்கல் செய்யவில்லை.காலை 11:00 மணி முதல் மதியம் 3:00 மணி வரைநாம் தமிழர் கட்சி வேட்பாளர் கவுசிக் உட்பட 10 பேர் விண்ணப்ப படிவங்களை தேர்தல் பிரிவில் பெற்று சென்றனர். டி.எஸ்.பி., பவித்ரா தலைமையிலான போலீசார் பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இரு வாயில்களிலும் பரிசோதனை செய்த பின்னரே மக்கள், அலுவலர்களை அனுமதித்தனர். கலெக்டர் அலுவலகத்தில் இருந்து நாறு மீட்டருக்கள் 3 வாகனங்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டன.மாவட்ட தேர்தல் அலுவலர் ஜெயசீலன் செய்திக்குறிப்பு:வேட்பு மனு தாக்கல் செய்வதற்கு வேட்பாளர், அவருடன் கூடுதலாக நான்கு நபர்கள் மட்டுமே தேர்தல் நடத்தும் அலுவலரின் அறைக்குள் அனுமதிக்கப்படுவர். ஒவ்வொரு நாளும் பெறும் வேட்புமனுக்கள், வேட்பாளர்கள் தாக்கல் செய்யும் உறுதிமொழி பத்திரங்கள் கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்களின் பார்வைக்கு வெளியிடப்படும், என்றார்.