| ADDED : பிப் 26, 2024 01:06 AM
விருதுநகர் : செயல்படாத சுகாதார வளாகத்தால் திறந்த வெளி கழிப்பிடம் அதிகரிப்பு, பாதாளச்சாக்கடை இல்லாததால் மழைக்காலங்களில் தெருக்களில் ஓடும் கழிவு நீர் என எண்ணற்ற பிரச்னைகளில் சிக்கி தவிக்கின்றனர் விருதுநகர் செந்திவிநாயகபுரம், நாரயணமடத்தெரு மக்கள்.விருதுநகர் நகராட்சியின் 26வது வார்டில் செந்திவிநாயகபுரம் 2,3 வது தெருக்கள், நாராயணமடத்தெரு, இடும்பன், நீராவித்தெரு, இன்னாசி தெரு, சுண்ணாம்புக்காரத்தெரு ஆகியவை உள்ளன. 3 ஆயிரத்திற்கும் அதிகமான குடும்பங்கள் உள்ளன. இதில் செந்திவிநாயகபுரம் தெருக்களில் குடிநீர் குழாய் பதிக்கும் பணிகளுக்காக பாதாளச்சாக்கடைக்காக அமைத்த குழாய்களை பெயர்த்து எடுக்கப்பட்டு பணிகள் நடந்தது. இதனால் வீடுகளுக்கு 8 நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. அதன் பின் பாதாளச்சாக்கடை பணிகள் நடக்கவில்லை. பாதாளச்சாக்கடை இல்லாததால் வீடுகளில் இருந்து கழிவு நீர் வெளியேற்றுவது மிகுந்த சீரமமாக உள்ளது. மழைக்காலங்களில் மழை நீர், கழிவு நீரோடு கலந்து வீடுகளுக்குள் சென்று துர்நாற்றம் வீசுகிறது.நாராயணமடத்தெருவில் சுகாதார வளாகம் செயல்படவில்லை. திறந்த வெளியில் கழிப்பிடம் அதிகரித்து வருகிறது. அருப்புக்கோட்டை மேம்பாலம் அடியில் உள்ள சர்வீஸ் ரோடுகளில் கற்கள் பெயர்ந்து வாகனங்களில் சென்றால் கூட இடறி விழுந்து விபத்து ஏற்படும் நிலை உள்ளது.செந்திவிநாயகபுரம் 2,3 வது தெருக்களில் பாதாளச்சாக்கடை அமைக்காததால் மழைக்காலங்களில் கழிவு நீர் வீடுகளுக்குள் சென்று மிகுந்த சிரமத்தை சந்திக்க வேண்டியுள்ளது. எனவே பாதாளச்சாக்கடை பணிகளை விரைந்து செயல்படுத்த வேண்டும்.-- குமார், போட்டோகிராபர்.
பாதாளச்சாக்கடை அமையுங்கள்
நாராயணமடத்தெருவில் சுகாதார வளாகம் போதிய பராமரிப்பு இல்லாமல் இடிந்து விழும் நிலையில் உள்ளது. இதை சீரமைப்பு செய்து செயல்பாட்டிற்கு கொண்டு வந்து சுகாதாரக்கேடு ஏற்படுவதை தடுக்க வேண்டும்.- ரோகிணி, குடும்பத்தலைவி.நாராயணமடத்தெரு அருகே அருப்புக்கோட்டை மேம்பாலத்தின் இரண்டு சர்வீஸ் ரோடுகளிலும் கற்கள் பெயர்ந்த நிலையில் உள்ளது. இவ்வழியாக செல்லும் பெரிய வடிகால் மணலால் நிறைந்து கழிவு நீர் செல்ல முடியாத நிலையில் உள்ளது. எனவே பெரிய வடிகாலை துார்வாரி, புனரமைப்பு செய்ய வேண்டும்.- மூர்த்தி, சுய தொழில்.
வடிகால் மராமத்து வேண்டும்
வடிகால் மராமத்து வேண்டும்