உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / நுால் கொள்முதல் முறைகேடு கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

நுால் கொள்முதல் முறைகேடு கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

சிவகாசி: சிவகாசி பஸ் ஸ்டாண்ட் முன்பு பெரியார் அறிவுலக நுாலக நுால் கொள்முதல் முறைகேட்டை கண்டித்து தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் ரவீந்திரன் தலைமை வகித்தார். துணை செயலாளர் ஜெகன் வரவேற்றார். சிவகாசி புறநகர் கிளை செயலாளர் முத்துராஜ், மாவட்ட துணை செயலாளர் பெரியநாயகம் முன்னிலை வகித்தனர். இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் மாவட்ட செயலாளர் பரமேஸ்வரன், தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்ற் செயலாளர் முத்து, தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் மாவட்ட செயலாளர் நந்தன் கனகராஜ், மாநில துணை செயலாளர் மணிமாறன் பேசினர். தமிழகத்தில் அறிவுசார் பண்பாட்டை அழிக்க முற்பட்டவர்களை அம்பலப்படுத்த வேண்டும், போலி புத்தக ஊழலுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும், உள்ளிட்ட பாசனங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மாநில குழு உறுப்பினர் சசி ரேகா நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !