செவிலியர்கள் ஆர்ப்பாட்டம்....
விருதுநகர்: விருதுநகர் கலெக்டர் அலுவலகத்தில் அரசுஅனைத்து சுகாதார செவிலியர்கள் சங்கம் சார்பில் தடுப்பூசி பணியில் எம்.எல்.எச்.பி., உட்படுத்தும் இயக்குனர் உத்தரவை திரும்ப பெறுதல், மகப்பேறு, சிசு மரணங்கள் உயர்வை தடுக்க சுகாதார செவிலியர்களின் நேரம், உழைப்பை முழுமையாக எடுக்கும் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதி உதவி திட்டத்தை சமூக நலத்துறைக்கு மாற்றுதல் உட்பட 6 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி மாநிலத் துணைத் தலைவர் வள்ளியம்மாள் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் மாநிலத் தலைவர் இந்திரா, துணைத் தலைவர் முத்துமாரி, துணை செயலாளர் விமலா தேவி உட்பட பலர் பங்கேற்றனர்.