மேலும் செய்திகள்
செவிலியர் பணியிடம் கலெக்டர் அறிவிப்பு
20-Nov-2026
விருதுநகர்: விருதுநகர் மாவட்டத்தில் உள்ள விரிவான அவசரகால மகப்பேறு, பச்சிளங்குழந்தை பராமரிப்பு மையங்களில் காலியாக உள்ள 59 தற்காலிக செவிலியர் பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளது. இதற்கான மாத ஊதியம் ரூ.21 ஆயிரம், வயது வரம்பு 50 வயது வரையாகும். செவிலியர் பட்டயப்படிப்பு, பி.எஸ்.சி., நர்சிங் முடித்து நர்சிங் கவுன்சிலில் கட்டாயம் பதிவு செய்திருக்க வேண்டும். விண்ணப்பங்களை https://nhm.tn.gov.in என்ற இணையத்தில் பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்த விண்ணப்பங்களை ஆவணங்களுடன் விருதுநகர் மாவட்ட சுகாதார அலுவலர், மாவட்ட சுகாதார அலுவலகம், மாவட்ட நலவாழ்வு சங்கம் என்ற முகவரிக்கு டிச. 4 மாலை 5:00 மணிக்குள் சமர்பிக்க வேண்டும் என கலெக்டர் ஷரண்யா அறி தெரிவித்துள்ளார்.
20-Nov-2026