உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / ஓட்டலில் பழைய சால்னா, கிரேவி

ஓட்டலில் பழைய சால்னா, கிரேவி

விருதுநகர்: விருதுநகர் - மதுரை ரோட்டில் ஓட்டலில் உணவு பாதுகாப்புத்துறை ஆய்வின் போது, முந்தைய நாள் சமைத்து மீதமான 2 கிலோ சால்னா, 5 கிலோ கிரேவி, 2 கிலோ பரோட்டா,சப்பாத்தி மாவு, கால் கிலோ வஞ்சிரம் மீன், உரிய வெப்ப நிலையில் இல்லாத ஒரு கிலோ இறால், ஒன்றரை கிலோ சிக்கன், ஒரு கிலோ பன்னீர் உள்ளிட்ட 15 கிலோ உணவுப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு, அழிக்கப்பட்டது. மேலும் 7 கிலோ பிளாஸ்டிக் இலை பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் இந்த ஓட்டலுக்கு வழங்கப்பட்ட உணவு பாதுகாப்பு உரிமத்தில் ஐஸ்கிரீம், தயிர் உள்ளிட்ட பால் பொருட்களும், ஜூஸ் போன்றவற்றை விற்பனை செய்ய அனுமதிக்கப்படவில்லை. எனவே அவற்றை உரிமத்தில் இணைக்கும் வரை விற்பனை தடை விதித்து மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் உத்தரவிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ