உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / 20கி., கஞ்சா பறிமுதல் ஒருவர் கைது

20கி., கஞ்சா பறிமுதல் ஒருவர் கைது

சேத்துார்: சேத்துார் பஸ் ஸ்டாண்டில் சந்தேகத்திற்கு இடமாக நின்றிருந்த மலையரசன் 26, என்பவரிடம் போலீசார் சோதனை செய்தனர். இதில் விற்பனைக்கு 1.5 கிலோ கஞ்சா பதுக்கி வைத்திருந்தது தெரிந்தது. தொடர் விசாரணையில் அதே பகுதியை சேர்ந்த பாலமுருகன் 20, என்பவருடன் சேர்ந்து வெளியூரில் இருந்து 25 கிலோ கஞ்சாவை விற்பனைக்காக வாங்கி வந்து அதில் 4.5 கிலோ கஞ்சாவை விற்பனை செய்துள்ளார். பாலமுருகன் வீட்டு அருகே போலீசார் சோதனை செய்து 19 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து மலையரசனை கைது செய்தனர். பாலமுருகனை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி