ஒரு நாள் வேலைநிறுத்தம்
விருதுநகர்: தி.மு.க.,வின் தேர்தல் வாக்குறுதிப் படி பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமுல்படுத்தக் கோரி சி.பி.எஸ்., ஒழிப்பு இயக்கம் சார்பில் விருது நகர் மாவட்டத்தில் நேற்று ஒரு நாள் வேலை நிறுத்தம் நடந்தது. இந்த வேலை நிறுத்தத்தில் ஊரக வளர்ச்சித் துறை, வருவாய் துறை, கூட்டுறவு துறை, சுகாதார துறை, வணிகவரி துறை, அரசு உதவி பெறும் கல்லுாரி, ஆதி திரா விடர் விடுதி உள்ளிட்ட பல்வேறு துறையினைச் சார்ந்த அரசு ஊழியர்கள் பங்கேற்றனர். மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் அந்தோணி ராஜ், ஈஸ் வரன் பங்கேற்றனர்.