மேலும் செய்திகள்
பஸ் ஏறி, இறங்கியதில் மூதாட்டி உடல் நசுங்கி பலி
15-May-2025
சாத்துார்: சாத்துார் அணைக்கரைப்பட்டியை சேர்ந்தவர் மாரிமுத்து மகன் பேச்சிமுத்து 52. இருக்கன்குடியில் தேங்காய் பழம் வியாபாரம் செய்து வருகிறார். வழக்கமாக கடையின் அருகில் உள்ள வைப்பாற்றுக்குள் உள்ள தகர செட் அருகில் படுத்து உறங்குவது வழக்கம்.நேற்று முன்தினம் இரவு வழக்கம்போல் பாய்விரித்து படுத்து கருப்பு போர்வையை போர்த்தி உறங்கினார்.கமுதி தேப்படை பட்டியில் இருந்து இருக்கன்குடிக்கு வேனில் வழிபட பக்தர்கள் வந்திருந்தனர். அதிகாலை 2:00 மணிக்கு, தகர செட்டில் பயணிகளை இறக்கி விட்டு வேனை ஓரமாக நிறுத்துவதற்காக தேப்படைப்பட்டி வேன் டிரைவர் அரசன் 50, வேனை பின்னால் ஓட்டிச் சென்றபோது அங்கு படுத்து உறங்கி கொண்டிருந்த பேச்சிமுத்து மீது ஏறி இறங்கியதில் உடல் நசுங்கி சம்பவ இடத்தில் பலியானார். இருக்கன்குடி போலீசார் விசாரிக்கின்றனர்.
15-May-2025