உள்ளூர் செய்திகள்

துவக்க விழா

அருப்புக்கோட்டை :அருப்புக்கோட்டை வேளாண் அறிவியல் நிலையத்தில் பிரதான் தன் தன்யா கிறிஸ்டி யோஜனா திட்ட துவக்க விழா நேரடி காட்சிகள் ஒளிபரப்பப் பட்டது. 100 பின்தங்கிய வேளாண் மாவட்டங்களை மேம்படுத்த பிரதமரின் இந்த திட்ட துவக்க விழா புதுடில்லியில் நடந்தது. இதன் நேரடி காட்சிகளின் ஒளிபரப்பை விருதுநகர் மாவட்ட விவசாயிகள் வேளாண் அறிவியல் நிலையத்தில் கண்டனர். பேராசிரியர்கள் கண்ணன், ஷீபா, கிருஷ்ணகுமார், உதவி பேராசிரியர்கள் கிருஷ்ணகுமார், வேணு தேவன், இணை பேராசிரியர் ஜட்டா, கவிதா, இணை பேராசிரியர் நல்ல குறும்பன் ஆகியோர் பேசினர்.அங்கக இடுபொருட்கள் தயாரிப்பு குறித்து ஜீவா பண்ணை மேலாளர்கள் செயல் விளக்கம் அளித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ