நரிக்குடியில் கட்டடங்கள் திறப்பு
நரிக்குடி: நரிக்குடி கண்டுகொண்டான் மாணிக்கத்தில் எம்.எல்.ஏ., நிதியில் ரூ. 6.50 லட்சத்தில் கட்டப்பட்ட பயணியர் நிழற்குடை, நல்லுக்குறிச்சியில் ஒருங்கிணைந்த வேளாண் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.34 லட்சத்தில் கட்டப்பட்ட பல்நோக்கு உலர்களம், தரம் பிரிப்பு கூடங்களுடன் வேளாண் கட்டடங்கள், அயோத்திதாஸ் பண்டிதர் குடியிருப்பு மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.25 லட்சம் செலவில் சமுதாயக்கூடம், ராமநாதபுரம் எம்.பி., தொகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ. 11 .17 லட்சம் செலவில் கட்டப்பட்ட ரேஷன் கடையை அமைச்சர் தங்கம் தென்னரசு திறந்து வைத்தார்.