மேலும் செய்திகள்
9 சுகாதாரத் துறை கட்டடங்கள் திறப்பு
13-Apr-2025
சாத்துார் : சாத்துார் ஊராட்சி ஒன்றிய கிராமங்களில் பணிகள் முடிந்த புதிய கட்டடங்களை அமைச்சர் சாத்துார் ராமச்சந்திரன் திறந்து வைத்தார்.சாத்துார் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட இருக்கன்குடியில் ரூ. 14 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட புதிய அங்கன்வாடி மைய கட்டடம், நத்தத்துபட்டியில் ரூ. 13.37 லட்சம் மதிப்பில்கட்டப்பட்ட புதிய அங்கன்வாடி மைய கட்டடம், ரூ. 18.20 லட்சம் மதிப்பில் ஜல் ஜீவன் திட்டத்தில் கட்டப்பட்ட 60 ஆயிரம் லிட்டர்குடிநீர் மேல்நிலைத் தொட்டி, குண்டல குத்துார், ஆத்திப் பட்டியில் எம்.எல்.ஏ.,தொகுதி மேம்பாட்டு நிதியில் ரூ. 16.75 லட்சம்மதிப்பில் கட்டப்பட்ட கலையரங்க கட்டடம் ஆகியவற்றை அமைச்சர் சாத்துார் ராமச்சந்திரன் திறந்து வைத்தார். வட்டார வளர்ச்சி அலுவலர்கள் வருவாய்த் துறையினர் கட்சி நிர்வாகிகள் மக்கள் விழாவில் கலந்து கொண்டனர்.
13-Apr-2025