உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் /  ஆண்டாள் கோயிலில் உண்டியல்கள் திறப்பு

 ஆண்டாள் கோயிலில் உண்டியல்கள் திறப்பு

ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் உண்டியல்கள் திறக்கப்பட்டு காணிக்கை பொருட்கள் கணக்கிடும் பணி நேற்று நடந்தது. அறநிலைய துறை உதவி ஆணையர் வளர்மதி, செயல் அலுவலர் சக்கரையம்மாள், ஆய்வாளர் முத்து மணிகண்டன் முன்னிலையில் 17 உண்டியல்கள் திறக்கப்பட்டு காணிக்கை பொருட்கள் கணக்கிடும் பணி நடந்தது.இதில் கோயில் உண்டியலில் காணிக்கையாக ரூ.13 லட்சத்து 23 ஆயிரத்து 113 ரொக்கம், 51 கிராம் தங்கம், 62 கிராம் வெள்ளி காணிக்கையாக இருந்தது. கணக்கிடும் பணியில் அற நிலையத்துறை ஊழியர்கள், பக்தர்கள், பட்டர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ