ஒப்பாரி முழக்க போராட்டம்
விருதுநகர்: விருதுநகர் நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் அலுவலக வளாகத்தில், தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலைப்பணியாளர் சங்கம் சார்பில் ஒப்பாரி முழக்க போராட்டம் நடந்தது. சங்கத் தலைவர் குமார்பாண்டி தலைமை வகித்தார். துணைத் தலைவர் பாலமுருகன், இணைச் செயலாளர் ராஜேந்திரன் முன்னிலை வகித்தனர். அரசு ஊழியர் சங்கத்தின், மாவட்ட செயலாளர் கருப்பையா தொடக்கி வைத்தார். மாவட்ட தலைவர் பாண்டித்துரை உட்பட பல்வேறு சங்க நிர்வாகிகள் பேசினர். உயிர்நீத்த சாலைப் பணியாளர் வாரிசுகளுக்கு கருணை அடிப்படையில் பணி நியமனம் வழங்க வேண்டும். 41 மாத பணிநீக்க காலத்தை உயர்நீதிமன்ற உத்தரவுப்படி பணிக் காலமாக முறைப்படுத்த வேண்டும். மாநில நெடுஞ்சாலை ஆணையத்தை களைவதுடன் தனியார்மயமாக்குவதை கைவிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்தனர்.