உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / அங்கீகரிக்கப்படாத மனைகள் வரன்முறைப்படுத்த வாய்ப்பு

அங்கீகரிக்கப்படாத மனைகள் வரன்முறைப்படுத்த வாய்ப்பு

விருதுநகர்: மலைப்பகுதிகளில் அங்கீகரிக்கப்படாத மனைப்பிரிவுகளை வரன்முறைப்படுத்துவதற்கான விண்ணப்பங்களை இணையம் மூலமாக பதிவு செய்யலாம் என கலெக்டர் சுகபுத்ரா தெரிவித்துள்ளார்.சட்டசபை மானியக் கோரிக்கையில் 2016 அக். 20க்கும் முன் அமைக்கப்பட்ட அனுமதியற்ற மனைப்பிரிவுகளில் தனி மனைகளுக்கு எந்த காலக்கெடு இன்றி வரன்முறை செய்து கொடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.இதையடுத்து ஜூலை 1 முதல் onlineppa.tn.gov.inஎன்ற இணையத்தில் விண்ணபங்களை பதிவு செய்யலாம். மேலும் அனுமதியற்ற மனைப்பிரிவு வரன்முறைப்படுத்துவததற்கு விண்ணப்பிக்க 2026 ஜூன் 30 வரை கால நீட்டிப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தில் விண்ணப்பிக்க விரும்புபவர்கள் ஜூலை 1 முதல் www.tcponline.tn.gov.inஎன்ற இணையத்தில் பதிவு செய்ய வேண்டும்.இது போன்று மலையிடப்பகுதிகளில் உள்ள அங்கீகரிக்கப்படாத மனைப்பிரிவுகளை வரன்முறைப்படுத்துவதற்கான விண்ணப்பங்களை www.tnhillarealayoutreg.inஎன்ற இணையத்திற்கு பதிலாக ஜூலை 1 முதல் நவ. 30 வரை www.tcponline.tn.gov.inஎன்ற இணையத்தில் விண்ணப்பங்களை பதிவு செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !