உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / மா.கம்யூ., கொடிகம்பத்தை அகற்ற எதிர்ப்பு: அளவீடுக்கு பின் அகற்றம்

மா.கம்யூ., கொடிகம்பத்தை அகற்ற எதிர்ப்பு: அளவீடுக்கு பின் அகற்றம்

சிவகாசி : சிவகாசியில் ரோட்டில் வைக்கப்பட்ட மா.கம்யூ., கொடி கம்பத்தை மாநகராட்சி ஊழியர்கள் அகற்றும் போது எதிர்ப்பு தெரிவித்தனர். பின்னர் சர்வே செய்து ரோட்டில் இருப்பது உறுதி செய்ததை தொடர்ந்து கட்சியினரே அகற்றினர். சிவகாசியில் நேற்று முன்தினம் பொது இடங்களில் இருந்த 55 கொடி கம்பங்களை மாநகராட்சி ஊழியர்கள் அகற்றினர். காமராஜர் சிலை அருகே மா.கம்யூ., கட்சி அலுவலகம் முன்பாக இருந்த கொடிக்கம்பத்தை மாநகராட்சி ஊழியர்கள் அகற்ற வந்தனர். அப்போது அக்கட்சியினர் கொடிக்கம்பம் எங்கள் அலுவலகத்தில் முன்பு உள்ளது எனவே அகற்ற விடமாட்டோம் என தகராறு செய்தனர்.உடனடியாக போலீசார், சர்வேயர், நெடுஞ்சாலைத் துறையினரை வரவழைத்து இடத்தை அளவீடு செய்தனர். இதில் கொடிக்கம்பம் ரோட்டில் இருந்தது உறுதி செய்யப்பட்டது. அதை தொடர்ந்து ஒரு மணி நேர போராட்டத்திற்குப் பிறகு கட்சியினரே தங்களது கொடிக்கம்பத்தினை அகற்றினர். பின்னர் சிவகாசி, திருத்தங்கல் நகரில் 22 கொடிக்கம்பங்கள், 49 கொடிமேடைகள் மாநகராட்சி சார்பில் இடித்து அகற்றப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை