உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / வியாகுல அன்னை சர்ச் திருவிழா

வியாகுல அன்னை சர்ச் திருவிழா

திருச்சுழி : திருச்சுழி அருகே கணக்கி ஓசாங்குளம் தூய வியாகுல அன்னை சர்ச் திருவிழா நடந்தது. தும்முசின்னம்பட்டி கார்மெல் சபை அருட் பணியாளர்கள் ஆம்புரோஸ், டயஸ் ரெஜின் மற்றும் சபை பணியாளர்கள் மரியதுரை, தேவராஜ், ஜோசப்வாஸ் முன்னிலையில் அன்னையின் உருவம் குறித்த கொடியினை ஏற்றி வைத்து துவக்கி வைத்தனர். திருப்பலியும், மறை உரையும் நடந்தது. 2 ம் நாள், திருச்சி வில்லியம் குரூப்பு சாலை ஞான பிரகாசம், தூத்துக்குடி சாமி ,குழித்துறை சகாய தாஸ் தலைமையில் திருவிழா ஆரம்ப கூட்ட திருப்பலி நடந்தது. ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர். உணவு வழங்கப்பட்டது. 3 ம் நாள் நன்றி திருப்பலியுடன் கொடி இறக்கம் செய்யப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி