உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / ராஜபாளையத்தில் நெல் கொள்முதல் நிலையம் துவக்கம்

ராஜபாளையத்தில் நெல் கொள்முதல் நிலையம் துவக்கம்

ராஜபாளையம்; ராஜபாளையம் மாரியம்மன் கோயில் முன்பு தமிழக அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையம் துவக்கப்பட்டது.ராஜபாளையம் புதுப்பாளையம், கடம்பன்குளம், தெற்குவெங்கா நல்லுார், வடக்கு வெங்கா நல்லுார், அலப்பசேரி, கருங்குளம், அப்பனேரி உட்பட பல்வேறு பகுதிகளில் தற்போது நெல் அறுவடை தொடங்க உள்ளது.வெளி மார்க்கெட்டில் வியாபாரிகளிடம் குறைந்த விலைக்கு விற்கும் நிலையை தவிர்ப்பதற்காக நேரடி விற்பனை நிலையம் துவக்கப்பட்டுள்ளது. ராஜபாளையம் தாசில்தார் ராஜிவ் காந்தி துவக்கி வைத்தார்.உதவி வேளாண் அலுவலர் சோமசுந்தரம், விவசாய சங்க தலைவர் ராமச்சந்திர ராஜா, உட்பட பலர் கலந்து கொண்டனர். நெல் கொள்முதல் நிலையத்தில் சன்னரக நெல் கிலோ 24.50, மோட்டா ரகம் 24.05 விலை நிர்ணயிக்கப்பட்டு தினமும் 800 மூடைகள் கொள்முதல் செய்ய இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி