பெயிண்டர் பலி
ராஜபாளையம்: ராஜபாளையம் ஆவரம்பட்டியை சேர்ந்தவர் சண்முகநாதன் 35, பெயிண்டர். திருமணம் ஆகி இரண்டு குழந்தைகள் உள்ளனர். நேற்று முன்தினம் மாலை 6:30 மணிக்கு காயல்குடி ஆற்று பாலம் அருகே டூ வீலரில் சென்றபோது பின்னால் வந்த வேன் மோதியதில் உயிரிழந்தார். வடக்கு போலீசார் டிரைவர் கணேஷ் குமாரிடம் விசாரிக்கின்றனர்.