மேலும் செய்திகள்
சங்கராபுரம் தொகுதியில் மக்களுடன் முதல்வர் முகாம்
16-Jun-2025
அருப்புக்கோட்டை : அருப்புக்கோட்டை அருகே பாலையம்பட்டியில் குடிநீர் கேட்டு பெண்கள் ஊராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.அருப்புக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்தை சேர்ந்த பாலையம்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட வடக்கு தெரு, காமாட்சியம்மன் கோயில் தெரு, பிள்ளையார் கோயில் தெரு உள்ளிட்ட பகுதிகளில் தாமிரபரணி குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.இங்கு, 50 நாட்களுக்கு மேலாக தாமிரபரணி குடிநீர் வினியோகம் இல்லை. மேலும் புழக்கத்திற்கு ஊராட்சி மூலம் போர்வெல் அமைத்து தொட்டிகளில் தண்ணீர் பிடித்து வந்தனர். மின்மோட்டார் பழுதால் அங்கும் தண்ணீரில் பிடிக்க முடியவில்லை. இதனால் குடிப்பதற்கும், புழக்கத்திற்கும் தண்ணீர் இன்றி மக்கள் தவிக்கின்றனர். நேற்று காலை 8:30 மணிக்கு ஊராட்சி அலுவலகத்தை அப்பகுதி பெண்கள் முற்றுகையிட்டனர். ஊராட்சி செயலர் கந்தன் இதுகுறித்து அதிகாரிகள் கவனத்திற்கு கொண்டு சென்று சரி செய்யப்படும் என கூறியதன் பேரில் கலைந்து சென்றனர்.
16-Jun-2025