பாண்டியன் நகரில் சி.சி.டி.வி., கேமரா பழுதால் மக்கள் அச்சம்
விருதுநகர்: விருதுநகர் பாண்டியன் நகரில் வைக்கப்பட்டுஉள்ள சி.சி.டி.வி., கேமரா பழுதாகி மூன்று மாதங்களாகிறது. இதனால் குற்றச்சம்பவங்கள் அதிகரிக்க வாய்ப்புள்ளது.விருதுநகர் பாண்டியன் நகரில் டூவீலர் திருட்டு, வழிப்பறி உள்ளிட்ட குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்களை கண்டறிவதற்காக 4 நான்கு பக்கமும் செயல்படும் விதத்தில் சி.சி.டி.வி., கேமராக்கள் வைக்கப்பட்டது.இந்நிலையில் கடந்த மூன்று மாதங்களாக சி.சி.டி.வி., கேமரா பழுதாகி இருப்பதால் திருட்டு, வழிப்பறி, டூவீலர் மாயம், தடை புகையிலை ஆகிய குற்றச்சம்பவங்களில் ஈடுபடுபவர்களை தொடர்ந்து கண்காணித்து நடவடிக்கை எடுக்க முடியாத நிலை நீடிக்கிறது.கேமரா பொருத்தப்பட்டுள்ள இடத்திற்கு அருகே ஏராளமான நிறுவனங்கள் செயல்படுகிறது. இதனால் திருட்டு சம்பவங்கள் நடப்பது அதிகரித்துள்ளதால் இரவு நேரத்தில் மக்கள் வெளியே செல்வதற்கு அஞ்சுகின்றனர். எனவே சி.சி.டி.வி., கேமரா பழுதை சரிசெய்து உடனடியாக செயல்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.