உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் /  பரமக்குடி டி.எஸ்.பி., சஸ்பெண்ட்

 பரமக்குடி டி.எஸ்.பி., சஸ்பெண்ட்

பரமக்குடி: மனைவி கொடுத்த புகாரின் பேரில் ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி டி.எஸ்.பி., சஸ்பெண்ட் செய்யப்பட்டார். பரமக்குடியில் ஜூலை 4ம் தேதி முதல் டி.எஸ்.பி., யாக பணிபுரிந்து வருபவர் ஜாபர்சித்திக். 2019 பேட்ச் டி.என்.பி.எஸ்.சி., குரூப்-1 தேர்வில் தேர்ச்சி பெற்று நேரடியாக தேர்வு செய்யப்பட்டவர். இவரது மனைவி ஷோபனா. அவர் ஆக., 4 அன்று வேலூர் குற்றப்பிரிவு போலீசாரிடம் புகார் அளித்தார். அதில் பல பெண்களுடன் தொடர்பு வைத்து, கணவர் ஜாபர்சித்திக் தன்னை தாக்கியதாக குறிப்பிட்டிருந்தார். அதன்பேரில் நேற்று வேலூர் சி.பி.சி.ஐ.டி., டி.எஸ்.பி., வேல்முருகன், பரமக்குடி டி.எஸ்.பி., முகாம் அலுவலகத்தில் ஜாபர்சித்திக்கிடம் விசாரணை நடத்தினார். இந்நிலையில் நேற்று இரவு ஜாபர்சித்திக் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்