உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / பஸ் ஸ்டாண்ட் பணிகள் தாமதம் சிரமத்தில் பயணிகள்

பஸ் ஸ்டாண்ட் பணிகள் தாமதம் சிரமத்தில் பயணிகள்

ராஜபாளையம், : பழைய பஸ் ஸ்டாண்ட் பணிகளின் தாமதத்தால் பயணிகள் தொடர் சிரமத்திற்கு உள்ளாகி வருவதற்கு மாற்று தீர்வு ஏற்படுத்த வேண்டும் என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.ராஜபாளையம் பழைய பஸ் ஸ்டாண்ட் மேம்பாட்டு பணிகளுக்காக 2021 டிச. முதல் ஏற்கனவே செயல்பட்டு வந்த பஸ் ஸ்டாண்ட் அடைக்கப்பட்டு ஒரு வருடத்திற்குள் பணிகள் முடிவடையும் என அறிவிக்கப்பட்டது.அதுவரை இதற்காக மாற்று பாதை அமைக்கப்பட்டு தற்காலிக பஸ் ஸ்டாண்டாக அரசு மகப்பேறு மருத்துவமனை முன்பு ஏற்பாடு செய்யப்பட்டது. ஏற்கனவே இருந்த பஸ் ஸ்டாண்டில் குவிந்த பயணிகளுக்கு இருக்கை, தற்காலிக கழிப்பறை என இதுவரை எந்த வசதிகளும் செய்து தரப்பட வில்லை.பலமுறை இது குறித்து பயணியர் சார்பில் கோரிக்கை விடுத்தும் சம்பந்தப்பட்ட நிர்வாகம் கண்டுகொள்ளாததால் சாமானிய பயணியர் பாதிப்பிற்கு உள்ளாகின்றனர். பணிகள் முடியும் வரை குடிநீர், இருக்கை, கழிப்பறை என தற்காலிக வசதிகள் செய்து தர பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை