உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / ஓய்வூதியர் ஆர்ப்பாட்டம்

ஓய்வூதியர் ஆர்ப்பாட்டம்

விருதுநகர் : விருதுநகரில் அரசு அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்கத்தின் சார்பில் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துவது, 70 வயதுக்கு மேற்பட்ட அனைத்து ஓய்வூதியர்களுக்கும் 10 சதவீத கூடுதல் ஓய்வூதியம் வழங்குவது, அனைவருக்கும் குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ.7850 வழங்குவது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் குருசாமி தலைமை வகித்தார். கோரிக்கைகளை விளக்கி மாவட்ட நிர்வாகிகள் ஜெகதீசன், டேவிட், சி.ஐ.டி.யு., மாநில செயலாளர் மகாலட்சுமி பேசினர். மாவட்ட பொருளாளர் மாரியப்பன் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை