மேலும் செய்திகள்
ஆர்ப்பாட்டம்
30-Jan-2025
விருதுநகர் : விருதுநகரில் தமிழ்நாடு ஓய்வு பெற்ற அரசு ஊழியர் சங்கத்தின் 26வது ஆண்டு அமைப்பு விழா மாவட்டத் தலைவர் உலகநாதன் தலைமையில் நடந்தது.இதில் மாவட்டச் செயலாளர்கள் செல்வின், சுவிசேசமுத்து, அரசு ஊழியர் சங்க மாவட்டச் செயலாளர் வைரவன் உள்பட பலர் பங்கேற்றனர்.இந்த கூட்டத்தில் மத்திய அரசைப் போல ரூ. ஆயிரம் மருத்துவப்படி வழங்க வேண்டும், சத்துணவு, அங்கன்வாடி, தொகுப்பூதிய ஊழியர்களுக்கு சட்டப்பூர்வ ஓய்வூதியம் வழங்க வேண்டும் உள்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. மாநில செயற்குழு உறுப்பினர் புவனேசன் நன்றி கூறினார்.
30-Jan-2025