உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / திருத்தங்கலில் அடுத்தடுத்து குழாய் உடைந்து குடிநீர் வீண் மக்கள் அதிருப்தி

திருத்தங்கலில் அடுத்தடுத்து குழாய் உடைந்து குடிநீர் வீண் மக்கள் அதிருப்தி

சிவகாசி : திருத்தங்கலில் மெயின் ரோட்டில் அடுத்தடுத்து மூன்று இடங்களில் குழாய் உடைந்து குடிநீர் வீணாவதால் மக்கள் அதிருப்தியில் உள்ளனர். சிவகாசி மாநகராட்சி திருத்தங்கலில் போலீஸ் ஸ்டேஷன் அருகில் செங்கமல நாச்சியார்புரம் ரோட்டில் கூட்டுக் குடிநீர் திட்டத்தின் கீழ் இயங்கும் நீரேற்று நிலையம் உள்ளது. இங்குள்ள மேல்நிலை குடிநீர் தொட்டியில் இருந்து நகரில் பல்வேறு பகுதிகளில் உள்ள மேல்நிலை குடிநீர் தொட்டிகளுக்கு குடிநீர் கொண்டு செல்லப்பட்டு அங்கிருந்து நகர் முழுவதும் உள்ள குடியிருப்புகளுக்கு வினியோகம் செய்யப்படுகின்றது. இந்நிலையில் விருதுநகர் மெயின் ரோட்டில் அடுத்தடுத்து மூன்று இடங்களில் குழாய் உடைந்து குடிநீர் வீணாகிறது. இதனால் தரகன் தோட்ட தெரு, ஆதி நாடார் தெரு, சின்னப்பன் நாடார் தெரு உள்ளிட்ட பகுதிகளுக்கு குடிநீர் பற்றாக்குறை ஏற்படுகிறது. பொதுவாக திருத்தங்கலில் 10 நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் வினியோகம் செய்யப்படும் நிலையில் குழாய் உடைந்து குடிநீர் வீணாவதால் பல்வேறு பகுதிகளுக்கு குடிநீர் வினியோகம் செய்ய முடியவில்லை. இதனால் மக்கள் குடிநீரை விலைக்கு வாங்கி பயன்படுத்துகின்றனர். தவிர போக்குவரத்து நிறைந்த ரோட்டில் தண்ணீர் ஓடுவதால் வாகன ஓட்டிகளும் பெரிதும் அவதிப்படுகின்றனர். எனவே சேதமடைந்த குழாயினை சரி செய்து குடிநீர் வீணாவதை தடுக்க வேண்டும் என மக்கள் எதிர்பார்க் கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை