மேலும் செய்திகள்
பகுதிநேர ரேஷன் கடை திறக்கப்படாத அவலம்
22-Jan-2025
திருச்சுழி : திருச்சுழி அருகே கீழ குருனைகுளம் மக்கள் ரேஷன் கடைக்கு 4 கி.மீ., துாரம் நடந்து சென்று ரேஷன் பொருட்கள் வாங்கி வரும் அவலத்தில் உள்ளனர்.திருச்சுழி ஊராட்சி ஒன்றியத்தை சேர்ந்தது ஆலடிபட்டி ஊராட்சி இதற்கு உட்பட்டது கீழ குருனைகுளம் கிராமம் இங்கு 200 குடும்பங்களுக்கு மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். ஊரில் இருந்து 4 கி.மீ., துாரம் தள்ளி உள்ள மீனாட்சிபுரத்திற்கு சென்று அங்குள்ள ரேஷன் கடையில் பொருட்கள் வாங்க வேண்டியுள்ளது.வயதான பெண்கள், ஆண்கள் ரேஷன் பொருட்கள் வாங்க நடந்தே செல்ல வேண்டி உள்ளது. ஊரில் பஸ் வசதியும் இல்லை. கீழ குருனைகுளம் கிராமத்திற்கு பகுதி நேர ரேஷன் கடை வேண்டி பலமுறை அதிகாரிகளிடம் கோரிக்கை வைத்தும் பயன் இல்லை.ஊரில் ரேஷன் கடைக்கு என கட்டடம், மின் இணைப்பு ஆகியவற்றை ஊர் மக்கள் சொந்த செலவில் ஏற்படுத்தி உள்ளனர். கடையை மட்டும் இங்கு செயல்படுத்தினால் போதுமானது என்பது இப்பகுதி மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. மாவட்ட நிர்வாகம் கீழ குருனைகுளம் கிராமத்திற்கு பகுதி நேர ரேஷன் கடை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
22-Jan-2025