உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / கஞ்சநாயக்கன்பட்டி மக்கள் 38 நாட்களாக குடிநீருக்கு தவிப்பு

கஞ்சநாயக்கன்பட்டி மக்கள் 38 நாட்களாக குடிநீருக்கு தவிப்பு

அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டை அருகே கஞ்சநாயக்கன்பட்டியில் குடிநீர் குழாய்கள் உடைந்து 38 நாட்களாகியும் சீரமைக்காததால் மக்கள் 38 நாட்களாக குடிநீருக்கு தவித்து வருகின்றனர். அருப்புக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்தை சேர்ந்தது கஞ்சநாயக்கன்பட்டி ஊராட்சி . இங்கு தாமிரபரணி குடிநீர் திட்டம் மூலம் குடிநீர் வழங்கப்படுகிறது. ஊரில் உள்ள மெயின் ரோடு அருகில் கட்டங்குடி செல்லும் குடிநீர் திட்ட பணிகளுக்காக குழாய்கள் பதிக்க தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தினர் தோண்டியபோது, கஞ்சநாயக்கன்பட்டியில் குடிநீர் வழங்கப்படும் பல பகுதிகளில் உடைந்தது. இதனால் ஊரில் வடக்கு தெருவில் 38 நாட்களும், லட்சுமி நகர் கடைசி பகுதியிலே 2 மாதங்களாகவும் குடிநீர் வினியோகம் தடைப்பட்டது. இப்பகுதி மக்கள் பலமுறை ஊராட்சியில் புகார் கொடுத்தும் எந்தவித நடவடிக்கையும் இல்லை. வட்டார வளர்ச்சி அதிகாரியிடம் புகார் கொடுத்தாலும் கண்டுகொள்ளவில்லை. இதனால் மக்கள் குடிநீரின்றி தவித்து வருகின்றனர். இதுகுறித்து ஊராட்சி கிளர்க் சுப்புராஜ்: தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தினர் ஊராட்சியில் தகவல் கொடுக்காமலேயே பகிர்மான குழாய்கள் பதிக்க தோண்டியுள்ளனர். இதனால் ஊராட்சிக்கு உட்பட்ட குழாய்கள் பல பகுதிகளில் உடைந்து விட்டது. இது சரி செய்யும் பணி நடக்கிறது. விரைவில் குடிநீர் வழங்கப்படும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ