உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / நேதாஜி நகரில் ரோடு வசதி இன்றி மக்கள் அவதி

நேதாஜி நகரில் ரோடு வசதி இன்றி மக்கள் அவதி

சாத்துார்: சாத்துார் அருகே நேதாஜி நகரில் கடந்த 20 ஆண்டுகளாக ரோடு வசதி இன்றி மக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.சாத்துார் ஊராட்சி ஒன்றியம் ஓ.மேட்டுப்பட்டி நேதாஜி நகரில் 20 ஆண்டுகளாக முறையான ரோடு வசதி இல்லை. ஊராட்சியின் நுழைவுப் பகுதியில் அமைந்துள்ள நேதாஜி நகரில் 30க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன.மெயின் ரோட்டில் இருந்து நகருக்குள் செல்லும் ரோடும் நகருக்கு உள்ளே உள்ள தெருரோடுகளும் மண் சாலையாக உள்ளது. சிறிய மழை பெய்தாலும் ரோடு சேறும், சகதியுமாக மாறி விடுகிறது.மேலும் மழை பெய்த சில நாட்களில் செடிகள் பாதையில் முளைத்து விடுகின்றன. இதில் விஷப் பூச்சிகள் அதிக அளவில் நடமாடுகின்றன. மழைக்காலத்தில் முழங்கால் அளவிற்கு மழைநீர் தேங்கி நிற்பதால் இப்பகுதி வீடுகளில் வசிக்கும் மக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.ஊராட்சியில் ரோடு போட வலியுறுத்தி பலமுறை மனு அளித்தும் இந்தப் பகுதியில் ரோடு போட நடவடிக்கை எடுக்கவில்லை எனமக்கள் புகார் கூறுகின்றனர். மாவட்ட நிர்வாகம் தலையிட்டு உடனடியாக ரோடு போட நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ