மேலும் செய்திகள்
'20 ஆண்டுகளாக அடிப்படை வசதி இல்லை'
22-Aug-2025
அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டை புறநகர் பகுதி தெருக்களில் ரோடு கண்டு 40 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்ட நிலையில் மழை காலத்தில் மக்கள் சிரமப்படுகின்றனர். அருப்புக்கோட்டை நகராட்சிக்கு உட்பட்டு 10 க்கும் மேற்பட்ட புறநகர் பகுதிகளும், ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்டு 15 க்கும் மேற்பட்ட புறநகர் பகுதிகளும் உள்ளன. இவற்றில் பல தெருக்களில் அடிப்படை வசதிகளான ரோடு, வாறுகால் அமைக்கப்படவில்லை. தெருக்களில் முறையான ரோடு இல்லாததால் குண்டும் குழியுமாக உள்ளது. மழைக்காலத்தில் வெள்ளம் சூழ்ந்து தெருக்களில் நடக்க முடியாதபடி சேறும் சகதியுமாக இருக்கிறது. நகராட்சி மற்றும் ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் பலமுறை கோரிக்கை வைத்தும் எந்தவித நடவடிக்கையும் இல்லை. அருப்புக்கோட்டை நகராட்சி 25 வது வார்டுக்கு உட்பட்ட நேதாஜி நகர் விரிவாக்க பகுதி மெயின் ரோடு பல பகுதிகளில் கிடங்காக உள்ளது. இங்கு ரோடு அமைத்து 40 ஆண்டுகளுக்கு மேல் ஆன நிலையில் மழை காலத்தில் வெள்ளம் சூழ்ந்து மக்கள் நடக்க முடியாமல் சிரமப்படுகின்றனர். 40 ஆண்டுகளாக நகராட்சிக்கு வரிகள் கட்டியும் தேவையான அடிப்படை வசதிகள் எதுவும் செய்யப்படவில்லை என, இப்பகுதி மக்கள் புலம்புகின்றனர். மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது இப்பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது.
22-Aug-2025