உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் /  விஸ்வநத்தத்தில் கலங்கலாக வரும் குடிநீரால் மக்கள் அவதி

 விஸ்வநத்தத்தில் கலங்கலாக வரும் குடிநீரால் மக்கள் அவதி

சிவகாசி: சிவகாசி அருகே விஸ்வநத்தம் ஊராட்சி காமராஜர் நகரில் குடிநீர் கலங்கலாக வருவதால் மக்கள் அவதியடைந்துள்ளனர். சிவகாசி அருகே விஸ்வநத்தம் ஊராட்சி காமராஜர் நகரில் 400 க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இப்பகுதியினருக்கு இங்குள்ள மேல்நிலை குடிநீர் தொட்டி மூலமாக குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. 40 நாட்களுக்கு ஒரு முறை மட்டுமே குடிநீர் வினியோகம் செய்யப்படுகின்றது. இதுவே அனைவருக்கும் போதாத நிலையில் வரும் குடிநீரும் மிகவும் கலங்கலாக நிறம் மாறி உள்ளது. இதனை புழக்கத்திற்கு கூட பயன்படுத்த முடியாத நிலையில் வேறு வழியேயின்றி மக்கள் குடிப்பதற்கு பயன்படுத்த வேண்டிய கொடுமை உள்ளது. ஒரு சிலர் குடிநீரை விலை கொடுத்து வாங்கி பயன்படுத்துகின்றனர். எனவே இப்பகுதியில் சீராக குடிநீர் வினியோகம் செய்வதோடு சுகாதாரமான குடிநீர் வழங்க வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை