உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / ரோடு, வாறுகால் வசதியின்றி மக்கள் அவதி

ரோடு, வாறுகால் வசதியின்றி மக்கள் அவதி

சாத்துார்: ஏழாயிரம் பண்ணை ஊராட்சியில் ராஜிவ் காந்தியின் நகரில் மெயின் ரோடு, குறுக்குத் தெருக்களில் ரோடு வாறுகால் வசதி இல்லை. ராஜிவ் காந்தி நகரில் தீப்பெட்டி தொழிற்சாலைகள் செயல்பட்டு வருகின்றன.இங்கு நெருக்கமாக வீடுகள் கட்டப்பட்டு உள்ளது.வீடுகளில் இருந்து வெளியாகும் கழிவு நீர் முழுவதும் மக்கள் நடமாடும் தெருவில் தேங்கி நிற்பதால் சுகாதாரக் கேடு ஏற்படுகிறது.தற்போது மழைக்காலம் என்பதால் கழிவு நீரும் மழை நீரும் பாதையில் தேங்கி நிற்கிறது. கழிவு நீரில் கால் வைத்து நடந்து செல்வதால் மக்கள் சொறி, சிரங்கு போன்ற தொற்று நோய்க்கு ஆளாகி அவதிப்படுகின்றனர்.ராஜிவ் காந்தி நகரில் அடிப்படை தேவைகளான ரோடு, வாறுகால்அமைத்திட ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ