உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / வீரசோழனில் பஸ் ஸ்டாண்ட் மக்கள் எதிர்பார்ப்பு

வீரசோழனில் பஸ் ஸ்டாண்ட் மக்கள் எதிர்பார்ப்பு

நரிக்குடி: நரிக்குடி வீரசோழனில் பஸ் ஸ்டாண்ட் ஏற்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர். நரிக்குடி வீரசோழனில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். ஆரம்ப சுகாதார நிலையம், போலீஸ் ஸ்டேஷன், பத்திரப்பதிவு அலுவலகம் உள்ளதால் சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து தினமும் ஏராளமானோர் வருகின்றனர். இங்கிருந்து பல்வேறு கிராமங்களுக்கு பஸ் வசதியும் உள்ளது. சென்னைக்கும் நேரடி பஸ் வசதி உள்ளது. இந்நிலையில் பஸ்கள் நின்று செல்ல அங்குள்ள சந்தையை ஒட்டி சிறிது இடம் ஒதுக்கப்பட்டது. தனியார் இடம் என்பதால் அங்கு அடிப்படை வசதிகளையும் செய்ய முடியாத சூழ்நிலை உள்ளதால், பயணிகள் சிரமப்படுகின்றனர். இட வசதி இல்லாததால் பஸ்கள் வந்து திரும்பி செல்ல நெருக்கடியான சூழ்நிலை உள்ளது. பஸ் டிரைவர்கள் படாத பாடு படுகின்றனர். இதையடுத்து அரசு புதிய பஸ் ஸ்டாண்ட் ஏற்படுத்த வேண்டும் என்கிற கோரிக்கை நீண்ட நாட்களாக இருந்து வருகிறது. இடத்தை தேர்வு செய்து பஸ் ஸ்டாண்ட் ஏற்படுத்தினால் தாராளமாக பஸ் நின்று செல்ல வசதியாக இருக்கும். பயணிகள் சிரமமின்றி வந்து செல்ல முடியும். இதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி