ஆக்கிரமிப்பு அகற்ற மனு
விருதுநகர்: விருதுநகர் கலெக்டரிடம் நரிக்குடி இந்திய கம்யூ., ஒன்றிய செயலாளர் செல்வம் அளித்த மனு: திருச்சுழி அருகே மேலகுமிழங்குளத்தில் 4வது வார்டு வடக்கு தெருவில் ஒரு சிலர் பொது நடைபாதையை ஆக்கிரமித்துள்ளனர். இதனால் மக்கள், பள்ளி மாணவர்கள் வாகனங்களில் செல்ல முடியாத நிலை நீடிக்கிறது. ஆக்கிரமிப்பை அகற்றி பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும், என கேட்டுள்ளார்.