உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / இயன்முறை பயிற்சி முகாம்

இயன்முறை பயிற்சி முகாம்

ஸ்ரீவில்லிபுத்துார்: கிருஷ்ணன்கோவில் கலசலிங்கம் பல்கலைக்கழகத்தின் பிசியோதெரபி மருத்துவ கல்லூரி சார்பில் நீட்டிப்பு மற்றும் இயக்கவியல் அறிவியல் பற்றிய ஒரு நாள் வேலைவாய்ப்பு பயிற்சி முகாமினை வேந்தர் ஸ்ரீதரன் துவக்கி வைத்தார். பேராசிரியர் பிரதீப் குமார் வரவேற்றார். பிசியோதெரபி கல்லூரி முதல்வர் ஜோதி பிரசன்னா பயிற்சியாளரை அறிமுகப்படுத்தினார். சினர்ஜி ஹெல்த் கேர் நிறுவனர் சுரேஷ் பிராங்க்ளின், இயன்முறை டாக்டர் அபூபக்கர் சித்திக் மாணவர்களுக்கு பயிற்சி அளித்தனர். மிதின் மோகன் நன்றி கூறினார். ஏற்பாடுகளை பேராசிரியர்கள் சிவானி, பாண்டி மீனா, உஷா நந்தினி செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !