உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / பிள்ளை லோகாச்சாரியார் திருநட்சத்திர திருவிழா

பிள்ளை லோகாச்சாரியார் திருநட்சத்திர திருவிழா

ஸ்ரீவில்லிபுத்தூர் : ஸ்ரீவில்லிபுத்தூர் மணவாள மாமுனிகள் சன்னதியில் பிள்ளை லோகாச்சாரியாரின் ஐப்பசி திருவோண திரு நட்சத்திர திருவிழா, சடகோப ராமானுஜர் ஜீயர் தலைமையில் நேற்று நடந்தது.இதனை முன்னிட்டு நேற்று காலை ஆண்டாள், ரெங்க மன்னார் சன்னதியில் இருந்து மாலை, வஸ்திரமும், பெருமாள் சன்னதியில் இருந்து சடாரி, ஆரத்தியும், பெரியாழ்வார் சன்னதியில் இருந்து மாலை மரியாதைகளும் கொண்டுவரப்பட்டு பிள்ளை லோகாச்சாரியாருக்கு சமர்ப்பிக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது.பின்னர் பிள்ளை லோகாச்சாரியார் மாட வீதிகள் எழுந்தருளினார். பக்தர்கள் நாலாயிர திவ்ய பிரபந்தம் வேதங்கள் பாடி முன் சென்றனர். ஏராளமான பக்தர்கள் தரிசித்தனர்.விழா ஏற்பாடுகளை சடகோப ராமானுஜ ஜீயரீன் சிஷ்யர்கள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை