உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / சிவகாசியில் பிப். 15 ல் தீப்பெட்டி தொழில் நுாற்றாண்டு விழா

சிவகாசியில் பிப். 15 ல் தீப்பெட்டி தொழில் நுாற்றாண்டு விழா

சிவகாசி: சிவகாசியில் அகில இந்திய தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் சங்கம் சார்பில் பிப். 15 ல் தீப்பெட்டி தொழில் நுாற்றாண்டு விழா கொண்டாடப்பட உள்ளதாக நிர்வாகிகள் தெரிவித்தனர்.சிவகாசியில் உள்ள அகில இந்திய தீப்பட்டி உற்பத்தியாளர்கள் சங்க அலுவலகத்தில் தீப்பெட்டி தொழில் நூற்றாண்டு விழா குழு தலைவர் மகேஸ்வரன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி: சிவகாசியில் அய்ய நாடார், சண்முக நாடார் ஆகியோரால் 1923 ல் தீப்பெட்டி தொழில் தொடங்கப்பட்டது.ஆரம்பத்தில் குடிசைத் தொழிலாக தொடங்கப்பட்ட தீப்பெட்டி தொழில் இன்று வளர்ச்சி அடைந்து 4 லட்சம் தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பு அளித்து வருகிறது. தீப்பெட்டி தொழிலின் நீட்சியாக பட்டாசு மற்றும் அச்சுத் தொழில் தொடங்கப்பட்டது. பல்வேறு சிக்கல்களைத் தாண்டி நடைபெற்று வரும் அத்திப்பட்டி தொழில் நுாற்றாண்டு விழா பிப். 15 ல் சிவகாசியில் சிறப்பாக கொண்டாடப்பட உள்ளது. அமைச்சர்கள் உட்பட மக்கள் பிரதிநிதிகள், பங்கேற்கின்றனர். என்றார்.அகில இந்திய தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் சங்க செயலாளர் நுார்முகமது, பொருளாளர் நாகராஜன், முன்னாள் தலைவர் அதிபதி ஆகியோர் உடன் இருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ