பிளவக்கல் பெரியாறு அணை நீர்மட்டம் 33 அடியாக உயர்வு
வத்திராயிருப்பு, : வத்திராயிருப்பு மலைப் பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் பிளவக்கல் பெரியாறு, கோவிலாறு அணைகளுக்கு நீர்வரத்து ஏற்பட்டு அணைகளின் நீர்மட்டம் உயர்ந்து வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.கடந்த மாதம் வரை போதிய மழை இல்லாமல் பெரியாறு அணையில் 25 அடி உயரத்திற்கும், கோவிலாறு அணையில் 24 அடி உயரத்திற்கு தண்ணீர் இருந்தது. வத்திராயிருப்பு தாலுகாவில் கான்சாபுரம், கூமாபட்டி, நெடுங்குளம், சேது நாராயணபுரம், புதுப்பட்டி உட்பட பல்வேறு கிராமங்களில் உள்ள கண்மாய்களில் தண்ணீர் இருப்பு நாளுக்கு நாள் குறைந்து வந்தது. இந்நிலையில் அக். 13 முதல் மாலை, இரவு நேரங்களில் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளிலும் வத்திராயிருப்பு சுற்றியுள்ள கிராமங்களிலும் மழை பெய்து வருகிறது. இதனால் தற்போது பெரியாறு அணையில் 33 அடி உயரத்திற்கும், கோவிலார் அணையில் 27 அடி உயரத்திற்கும் தண்ணீர் உள்ளது. தொடர்ந்து நீர் பிடிப்பு பகுதிகளில் மழை பெய்து அணைகளுக்கு நீர் வரத்து இருந்து கொண்டே உள்ளது. இதனால் வத்திராயிருப்பு தாலுகா விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.