உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / ஐ.டி., கார்டுக்கு போலீசாரிடம் ரூ. 100 கூடுதல் கட்டணம் வசூல்

ஐ.டி., கார்டுக்கு போலீசாரிடம் ரூ. 100 கூடுதல் கட்டணம் வசூல்

விருதுநகர்: விருதுநகர் மாவட்டத்தில் உள்ள போலீசாருக்கு புதிய அடையாள அட்டை வழங்க ஒரு கார்டுக்கு ரூ. 100 கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதனால் போலீசார் விரக்தி அடைந்துள்ளனர்.விருதுநகர் மாவட்ட போலீசாருக்கு பெயர், பிறந்த தேதி, கிரேடு உள்ளிட்ட தகவல் இடம் பெற்ற அடையாள அட்டை வழங்கப்படுகிறது. இந்த அடையாள அட்டை சேதமானலும், காணாமல் போனாலும் மாவட்ட போலீஸ் நிர்வாகத்தின் மூலம் புதிய அடையாள அட்டை வழங்கப்படுகிறது. இப்படி புதிய அடையாள அட்டை பெற மாவட்ட அலுவலகத்திற்கு வந்து புகைப்படம் எடுக்க வருபவர்களிடம் வழக்கமாக ரூ. 100 கட்டணம் வசூலிக்கப்பட்டது. ஆனால் தற்போது ரூ.200 என நிர்ணயம் செய்து வசூலிக்கப்படுகிறது. கான்ஸ்டபிள் முதல் ஏட்டுக்கள் வரை மட்டும் தனி வசூல் நடைபெறுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. உயர் அதிகாரிகள் கவனத்திற்கு கொண்டுச் சென்றாலும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.எனவே மாவட்ட போலீஸ் நிர்வாகம் அடையாள அட்டைக்கு கூடுதலாக வசூல் செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என போலீசார் எதிர்பார்க்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ