உள்ளூர் செய்திகள்

போலீஸ் செய்திகள்

பட்டாசு திரி பதுக்கிய இருவர் மீது வழக்குவிருதுநகர்: திருத்தங்கலைச் சேர்ந்தவர் அந்தோணி ராஜ் 42. இவர் பட்டாசு தயாரிக்கப் பயன்படும் 5 குரோஸ் மிஷின் திரிகளை பதுக்கி வைத்திருந்ததார். திருத்தங்கலைச் சேர்ந்த முரளிராஜன் 50. இவர் அனுமதியின்றி 5 குரோஸ் வெள்ளை திரிகளை பதுக்கி வைத்திருந்தார். இருவர் மீதும் ஆமத்துார் போலீசார் வழக்கு பதிந்தனர்.கஞ்சா: மூன்று பேர் கைதுசிவகாசி: சிவகாசி திருத்தங்கல் மேற்கு தெருவை சேர்ந்த பார்த்திபன் 52, இவரது மனைவி லட்சுமி 49, பெரியார் காலனி ரவி 57, ஆகியோர் பள்ளி அருகே விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்தனர். திருத்தங்கல் போலீசார் கஞ்சாவை பறிமுதல் செய்து லட்சுமி, ரவியை கைது செய்தனர். பார்த்திபனை தேடுகின்றனர்.* இதேபோல் திருத்தங்கல் பெரியார் காலனியைச் சேர்ந்த பிரசாத் 20, காளியம்மன் கோயில் அருகே விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்தார். கிழக்கு போலீசார் கஞ்சாவை பறிமுதல் செய்து அவரை கைது செய்தனர்.பட்டாசு பறிமுதல்சிவகாசி: சிவகாசி திருத்தங்கல் எம்.ஜி.ஆர்., காலனியை சேர்ந்தவர் அருண் பாண்டியன் 25. இவர் தனது வீட்டில் அரசு அனுமதியின்றி பட்டாசுகளை பதுக்கி வைத்திருந்தார். கிழக்கு போலீசார் பட்டாசுகளை பறிமுதல் செய்தனர்.--தவறி விழுந்து பலிதளவாய்புரம்: செட்டியார் பட்டியை சேர்ந்தவர் கார்த்திகேயன் 42, தேன் வியாபாரி. நேற்று முன்தினம் டூவீலரில் அசையாமணி விலக்கு அருகே விவசாய கிணற்றில் குளிப்பதற்கு செல்லும் பொழுது வயல்வெளியில் நிலை தடுமாறி அருகில் இருந்த கம்பி வேலியில் விழுந்துள்ளார். இதில் பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்தில் உயிரிழந்தார். தளவாய்புரம் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ