போலீஸ் செய்திகள்
கஞ்சா பதுக்கல்; வாலிபர் கைதுவிருதுநகர்: காமராஜர் காலனியைச் சேர்ந்தவர் கிரண் 26. இவர் 30 கிராம் கஞ்சாவை விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்ததால் ஊரகப்போலீசார் கைது செய்தனர்.பட்டாசு பதுக்கியவர்கள் மீது வழக்குவிருதுநகர்: செங்குன்றாபுரத்தைச் சேர்ந்தவர் கருப்பசாமி 29. இவர் வீட்டின் முன்பு பட்டாசுக்களை பதுக்கி வைத்திருந்ததை ஆமத்துார் போலீசார் கண்டறிந்து பறிமுதல் செய்து வழக்கு பதிந்தனர்.* சிவகாசி: திருத்தங்கல் சரஸ்வதி நகரை சேர்ந்தவர் அய்யாசாமி 29. இவர் அரசு அனுமதியின்றி அடியாள் பேப்பர் என்ற வெடியை சட்ட விரோதமாக தயாரித்தார். திருத்தங்கல் போலீசார் அவர் மீது வழக்குப்பதிவு செய்து ரூ. 15,000 மதிப்பிலான பட்டாசுகளை பறிமுதல் செய்தனர்.* செங்கமல நாச்சியார்புரம் சிவாஜி கணேசன் காலனியை சேர்ந்தவர் கருப்பசாமி 41. இவர் தனது வீட்டில் அரசு அனுமதியின்றி சட்டவிரோதமாக விற்பனை செய்வதற்காக பட்டாசுகள் வைத்திருந்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து ரூ. 21 ஆயிரம் மதிப்பிலான பட்டாசுகளை பறிமுதல் செய்தனர்.இளைஞர் பலிவிருதுநகர்: எட்டூர்வட்டம் டோல்கேட் அருகே 30 வயதுடைய அடையாளம் தெரியாத இளைஞர் விபத்தில் காயமடைந்தார். இவர் விருதுநகர் அரசு மருத்துவமனையில் பலியானார். வச்சக்காரப்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.-----தற்கொலைசிவகாசி: சிவகாசி நாரணாபுரம் தெற்கு தெருவை சேர்ந்தவர் சீனிவாசன் 45. மது அருந்தும் பழக்கம் உள்ள இவர் வீட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். கிழக்கு போலீசார் விசாரிக்கின்றனர்.-திருடியவர் கைது ராஜபாளையம்: ராஜபாளையம் மலையடிப்பட்டி காந்தி நகரை சேர்ந்தவர் சங்கரன் 59, மனைவியுடன் சென்னையில் உள்ள மகளின் வளைகாப்பு நிகழ்ச்சிக்கு அக். 7ம் தேதி சென்றனர். இந்நிலையில் வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு ரூ.30 ஆயிரம் மதிப்புள்ள டி.வி, பித்தளை பாத்திரங்கள் திருடு போயுள்ளன. அதே பகுதியை சேர்ந்த கணேச மூர்த்தி 33, என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர்.