உள்ளூர் செய்திகள்

போலீஸ் செய்திகள்

தம்பியை சுத்தியலால் அடித்த அண்ணன் கைதுசிவகாசி: சிவகாசி திருத்தங்கல் ஆலவூரணியை சேர்ந்தவர் மாரீஸ்வரன் 34. இவருக்கும் இவரது உடன்பிறந்த அண்ணன் பாண்டியனுக்கும் 39, சொத்து பிரச்னை காரணமாக நான்கு ஆண்டுகளாக பேச்சுவார்த்தை இல்லை. இந்நிலையில் மாரீஸ்வரன் வீட்டிலிருந்த போது அங்கு வந்த பாண்டியன் அவரை தகாத வார்த்தை பேசி சுத்தியலால் தலையில் அடித்து கொலை மிரட்டல் விடுத்தார். திருத்தங்கல் போலீசார் அவரை கைது செய்தனர்.டிரைவர் தற்கொலைசிவகாசி: சிவகாசி திருத்தங்கல் கண்ணகி காலனியைச் சேர்ந்தவர் முத்துராஜ் 28. டிரைவராக வேலை பார்த்து வந்த இவர் சரிவர வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்து வந்தார். இதனை குடும்பத்தினர் கண்டித்தனர். இந்நிலையில் முத்துராஜ் அப்பகுதியில் உள்ள கல்குவாரி அருகே மரத்தில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். திருத்தங்கல் போலீசார் விசாரிக்கின்றனர்.ஓடையில் தவறி விழுந்தவர் பலிசிவகாசி: சிவகாசி திருத்தங்கல் ஸ்டாண்டர்டு காலனியை சேர்ந்தவர் உதயகுமார் 25. இவர் எம்.புதுப்பட்டியில் பாரில் வேலை பார்க்கிறார். வேலை முடிந்து வீட்டிற்கு வராததால் குடும்பத்தினர் தேடி வந்தனர். இந்நிலையில் அவர் காளையார்குறிச்சி பெரியகுளம் கண்மாய் அருகே ரோட்டோர ஓடையில் டூவீலரோடு நிலை தடுமாறி விழுந்து இறந்து கிடந்தது தெரியவந்தது. எம்.புதுப்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.தொழிலாளி பலிசிவகாசி: சிவகாசி ரிசர்வ் லைன் சிலோன் காலனியை சேர்ந்தவர் அந்தோணி ராஜன் 37. இவர் விருதுநகர் அருகே பாவாலியில் தீப்பெட்டி கம்பெனியில் வேலை செய்து வந்தார். வேலை முடிந்து டூவீலரில் வரும் போது மதுரை காமராஜபுரத்தைச் சேர்ந்த கணேசன் 65, ஒட்டி வந்த லாரி மோதியதில் இறந்தார். திருத்தங்கல் போலீசார் விசாரிக்கின்றனர்.டூவீலர்கள் மோதல்: ஒருவர் பலிசாத்துார்: சாத்துார் போத்தி ரெட்டிபட்டியை சேர்ந்தவர் பிச்சைக்கனி ,57 .விவசாயி அக்.28 மாலை 5:00 மணிக்கு உப்பத்துார் - போத்தி ரெட்டிபட்டி ரோட்டில் டூவீலரில் (ஹெல்மெட் அணியவில்லை) சென்றார். எதிரில் துாத்துக்குடி மாவட்டம் மேலக்கரத்தை ராஜேஸ்குமார், 48.ஓட்டி வந்த இருசக்கர வாகனம் மோதியது. காயமடைந்த பிச்சைக்கனி விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும்போது வழியில் பலியானார். சாத்துார் தாலுகா போலீசார் விசாரிக்கின்றனர்.பட்டாசு திரி பறிமுதல்: கைது 3சாத்துார்: ஆலங்குளம் எஸ்.ஐ.,ராபியம்மாள் தலைமையில்போலீசார் ரோந்து சென்ற போது சங்கரமூர்த்தி பட்டி ரமேஷ் குமார் வீட்டில் வைத்து ஆலங்குளம் உத்தண்டன், இவர் மனைவி மீனாட்சி,ஆகியோர் பட்டாசு திரி தயாரித்தனர்.இவர்களிடமிருந்து பட்டாசு திரியை போலீசார் பறிமுதல் செய்தனர். மூவரையும் கைது செய்து ஆலங்குளம் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை