உள்ளூர் செய்திகள்

போலீஸ் செய்திகள்

கிணற்றில் மூழ்கி பலிசிவகாசி: கிச்சநாயக்கன்பட்டி கிழக்கு தெருவை சேர்ந்தவர் பாலமுருகன் 44. மது பழக்கம் உள்ள இவர் அப்பகுதியில் உள்ள கிணற்றில் தண்ணீரில் மூழ்கி இறந்து கிடந்தார். மாரனேரி போலீசார் விசாரிக்கின்றனர்.கஞ்சா பறிமுதல்: இருவர் கைதுசாத்துார்: சிவகாசி ம.துரைச்சாமிபுரத்தை சேர்ந்தவர் ராஜா 33. ரயில்வே கேட் அருகில் கஞ்சா விற்றார். அவரிடம் இருந்து 650 கிராம் கஞ்சாவையும், சிவகாசி இடையன்குளத்தை சேர்ந்தவர் மணிகண்டன் 18. வெள்ளக் கரை ரோட்டில் பூங்கா அருகில் கஞ்சா விற்றார். அவரிடம் இருந்து 550 கிராம் கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து இருவரையும் கைது செய்தனர். ஆயுதங்கள் வைத்திருந்த 6 பேரிடம் விசாரணைஸ்ரீவில்லிபுத்துார்: கிருஷ்ணன்கோவில் இன்ஸ்பெக்டர் தேவமாதா, போலீசார் நேற்று அதிகாலை மல்லி அருணாசலபுரம் பகுதிகளில் ரோந்து சென்றனர். அப்போது அங்கு, அருணாச்சலபுரம் காளிபாண்டி 24, காளீஸ்வரன் 28, நெடுங் குளம் கருப்பசாமி 24, ஈஞ்சார் முத்துராமன் 27, வடபட்டி ரமேஷ் கண்ணன் 20, சாமிநத்தம் ஜீவகுமார் 26 ஆகியோர் கூட்டமாக நின்றிருந்தனர். அவர்களிடம் கத்தி, வாள், ஏர்கன் இருந்ததை பறிமுதல் செய்தனர். எதற்காக ஆயுதங்கள் வைத்திருந்தனர் என்பது குறித்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை