போலீஸ் செய்தி
வெவ்வேறு சம்பவங்களில் இரு பெண்கள் தற்கொலைவிருதுநகர்: விருதுநகர் அருகே வடமலைக்குறிச்சி காமராஜர் காலனியைச் சேர்ந்தவர் சரஸ்வதி 56. இவர் வீட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். ஆமத்துார் போலீசார் விசாரிக்கின்றனர். அதே போல குப்பாம்பட்டியைச் சேர்ந்தவர் சுதாராணி 32. இவர் வயிற்று வலி அதிகமாக இருந்ததால் வீட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்தார். போலீசார் விசாரிக்கின்றனர்.குட்கா கடத்திய மூவர் கைதுவிருதுநகர்: விருதுநகர் அருகே சந்திரகிரிபுரத்தைச் சேர்ந்தவர்கள் புளிராஜ் 23, கங்காதரன் 32, சரவணன் 31. இவர்கள் மூவரும் டூவீலரில் நேற்று முன்தினம் காலையில் 450 குட்கா பாக்கெட்களை கடத்தி வந்தனர். இவர்களை போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.கஞ்சா ஒருவர் கைதுசிவகாசி: விருதுநகர் அருகே கோவிந்தநல்லுார் கிழக்கு தெருவை சேர்ந்தவர் முத்துக்குமார் 23.இவர் வடமலாபுரம் அரசு பள்ளி பின்புறம் விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்தார். திருத்தங்கல் போலீசார் அவரை கைது செய்து கஞ்சா, டூவீலரை பறிமுதல் செய்தனர்.முதியவர் தற்கொலைசாத்துார்: சாத்துார் படந்தால் கிராமத்தை சேர்ந்தவர் சுந்தரம், 74. உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்தார். நேற்று முன்தினம் மன விரக்தியில் விஷம் சாப்பிட்டு வீட்டில் தற்கொலை செய்து கொண்டார். போலீசார் விசாரிக்கின்றனர்.குட்கா : ரூ.7 ஆயிரம் அபராதம்சிவகாசி: சிவகாசி மாநகராட்சி சுகாதாரத் துறையினர் ஆய்வு செய்ததில் 7 கடைகளில் விற்பனை செய்யப்பட்ட ரூ. 20 ஆயிரம் மதிப்புள்ள தடை செய்யப்பட்ட பொருட்களை பறிமுதல் செய்து ரூ. 7 ஆயிரம் அபராதம் விதித்தனர்.