உள்ளூர் செய்திகள்

போலீஸ் செய்திகள்

விபத்தில் முதியவர் பலிவிருதுநகர்: விருதுநகர் அருகே வடமலாபுரம் பாவாளக்குறிச்சியைச் சேர்ந்தவர் கிருஷ்ணசாமி. இவர் மெயின் ரோட்டிற்கு டூவீலரில் செல்பவர்களிடம் லிப்ட் கேட்டு சென்று டீ குடித்து திரும்பி வருவது வழக்கம். ஜூன் 9ல் காலையில் டீ குடிப்பதற்காக கிருஷ்ணசாமி அதே பகுதி செல்வக்குமார் ஓட்டிச் சென்ற டூவீலரில் லிப்ட் கேட்டு பின்னால் அமர்ந்து சென்றார்.அன்று காலை 6:50 மணிக்கு உப்போடை பஸ் ஸ்டாப் அருகே டூவீலர் சென்ற போது கீழே விழுந்த கிருஷ்ணசாமி காயமடைந்து மேல்சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இவர் நேற்று முன்தினம் காலை 6:15 மணிக்கு பலியானார். ஆமத்துார் போலீசார் விசாரிக்கின்றனர்.பனை மரத்திலிருந்து தவறி விழுந்து பலிஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்துார் அருகே மம்சாபுரம் மீனாட்சி தோட்டத்தைச் சேர்ந்த அண்ணாமலை மகன் ரஞ்சித் குமார் 29, இவர் பி.எஸ்சி படித்துவிட்டு பனை ஏறி பதநீர் இறக்கும் தொழில் செய்து வந்தார். நேற்று முன் தினம் மாலை 6:45 மணிக்கு பனை மரத்தில் ஏறிக் கொண்டிருக்கும்போது நிலை தடுமாறி விழுந்து கை, காலில் எலும்பு முறிவு ஏற்பட்டு மயக்கம் அடைந்தார். ஸ்ரீவில்லிபுத்துார் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டு டாக்டர்கள் பரிசோதனை செய்த போது அவர் உயிரிழந்தது தெரிந்தது. மம்சாபுரம் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ