உள்ளூர் செய்திகள்

போலீஸ் செய்தி

பட்டாசுடன் லோடுவேன் பறிமுதல்: இருவர் கைது சாத்துார்: வெம்பக்கோட்டை மடத்துப் பட்டி விலக்கில் எஸ்.எஸ்.ஐ. சங்கர நாராயணன் தலைமையில் போலீசார் நேற்று முன்தினம் இரவு 8:30 மணிக்கு வாகன சோதனை செய்தனர். அவ்வழியாக விளாமடத்துப் பட்டி காளிராஜ். 20. ஓட்டி வந்த லோடு வேனை போலீசார் நிறுத்தி சோதனை செய்தனர். அதில் உரிய அனுமதியின்றி 10க்கும் மேற்பட்ட அட்டைப்பெட்டிகளில் சரவெடி பட்டாசுகள் இருந்தன. விஜய கரிசல் குளம் ரஞ்சித் குமார், 25. நடத்தி வரும் பட்டாசு கடையிலிருந்து மாற்று இடத்திற்கு பட்டாசுகளை கொண்டு செல்வது விசாரணையில் தெரிய வந்தது. பட்டாசுடன் வேனை பறிமுதல் செய்த போலீசார் இருவரையும் கைது செய்தனர்.வெம்பக்கோட்டை போலீசார் விசாரிக்கின்றனர். வாலிபர் மீது போக்சோ சாத்துார்: சாத்துார் அப்பைய நாயக்கன்பட்டியை சேர்ந்தவர் கருப்பசாமி, 19. ஒரு வருடத்திற்கு முன்பு அதே பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமியை காதலித்து திருமணம் செய்து குடும்பம் நடத்தி வந்துள்ளார். தற்போது சிறுமி கர்ப்பமானதை தொடர்ந்து அப்பகுதியில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சிகிச்சைக்காக சென்ற போது சிறுமிக்கு வயது 17 என்பது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து சாத்துார் மகளிர் போலீசார் போக்சோ வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ